2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Kogilavani   / 2014 ஜூன் 06 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரணி சந்திக்கருகில் வியாழக்கிழமை(5) நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

செங்கலடியிலிருந்து இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அரச வாகனம் வேக கட்டுபாட்டை இழந்து வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள்களுடன்  மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த சத்துருகொண்டானை சேர்ந்த யோகம்மா சிவகொழுந்து  (வயது 56) என்பவரின் நிலையே கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடார்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X