2025 மே 02, வெள்ளிக்கிழமை

இந்தியப் பிரஜை கைது

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இந்திய புடவை வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளிக் கிராமத்தில் வீடுவீடாகச் சென்று புடவை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது நேற்று மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.

தென்னிந்தியா, தமிழ்நாடு விருதுநகரைச் சேர்ந்த பெற்றடியான் மகேந்திரன் (வயது 43) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை நீதிமன்றத்தின் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தாம் எடுத்து வருவதாகப் பொலிஸார் கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .