2025 மே 01, வியாழக்கிழமை

மகள் மீது துஷ்பிரயோகம்: தந்தைக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2014 ஜூன் 10 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சம்மாந்துறை பிரதேசத்தில் 13 வயதான தனது மகளைப்  பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சிறுமியின் தந்ததையை எதிர்வரும்; 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை மாவட்ட நீதவான் நீதமன்ற நீதவான் ரீ.கருணாகரன உத்தரவிட்டார்.

குறித்த சிறுமி, தனது தந்தையால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக  சிறுமியின் தாய் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து நான்கு பிள்ளைகளின் தந்தையான(56) மேற்படி   நபர், சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் திங்கட்கிழமை (9) கைதுசெய்யப்பட்டார்.

மேற்படி நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் திங்கட்கிழமை (9) மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ் உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .