2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நகர்ப்புற வீட்டுத்தோட்ட உருவாக்கம் பற்றி பயிற்சி

Suganthini Ratnam   / 2014 ஜூன் 20 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


பெண்களுக்கு நகரப்புற வீட்டுத்தோட்ட உருவாக்கம் பற்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக விவசாய போதனா ஆசிரியை  குந்தவை ரவிசங்கர் தெரிவித்தார்.

சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாய பயிற்சிப் பண்ணையில் நடைபெற்ற நகர்ப்புற வீட்டுத்தோட்டம் தொடர்பில் செய்முறைப் பயிற்சிநெறிகளை விவசாயப் போதனா ஆசிரியை  குந்தவை ரவிசங்கர், சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாய பயிற்சி பண்ணை உதவி முகாமையாளர் கே.நிசாந்தன் ஆகியோர் வழங்கினர்.

விவசாயத் திணைக்களத்தின் செயற்றிட்டத்துக்கு அமைய மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாஸனின் பணிப்புரைக்கிணங்க இப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறுகிய நிலப்பரப்புள்ள இடங்களிலும் காணி இல்லாத குடிமனைகளிலும் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு நகரப்புற வீட்டுத்தோட்டத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி பயிற்சிகள் தொடராக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதன் அடிப்படையில், காத்தான்குடி நகரப்புறத்தைச் சேர்ந்த 29 பெண்களுக்கு சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாய பயிற்சிப் பண்ணையில் பூரணமான வீட்டுத்தோட்ட நிபுணத்துவம் குறித்த செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

நகரப்புறத்தில் காணி இல்லாத அல்லது குறுகிய நிலப்பரப்பிற்குள் வாழும் குடும்பங்கள் இதன் மூலம் முழுமையாக நன்மை அடைய முடியும். இந்தப் பயிற்சிகள் வீட்டுத்தோட்ட விவசாயத்தை மேற்கொண்டு இரசாயனம் கலக்காத,  இயற்கையான, போஷாக்குள்ள மரக்கறிகளை உற்பத்தி செய்ய உத்தேசித்திருப்போருக்கு பெருந்துணை புரியும். அத்துடன் சமகாலத்தில் இயற்கை முறை விவசாய உற்பத்திகளுக்கு சந்தையில் கிராக்கி நிலவுகிறது. இத்தகைய வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையின் மூலம் அதிக வருமானத்தையும் ஈட்டிக் கொள்ளலாம் என்று சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாயப் பயிற்சிப் பண்ணை உதவி முகாமையாளர் கே.நிசாந்தன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .