2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தொழில் வழிகாட்டல் பயிற்சி

Suganthini Ratnam   / 2014 ஜூன் 20 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

நலிவுற்ற பெண்களை வலுவூட்டும் திட்டத்தின் கீழ், தூரக் கிராமத்து பெண்களுக்கு  தொழில் வழிகாட்டல் பயிற்சிநெறிகளை தாம் தொடர்ந்து வழங்கி வருவதாக மட்டக்களப்பு  வை.எம்.சீ.ஏ. நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் சி.லாவன்யா தெரிவித்தார்.

'சந்தோசம் மிக்க எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளில் அமைந்த இப்பயிற்சிநெறியின் தொடர்ச்சி நேற்று வியாழக்கிழமை  வவுணதீவில் நடைபெற்றது.

சேவ் த சில்ரனின்; நிதி அனுசரைணயுடன் நடைபெற்றுவரும்  இப்பயிற்சியில் காஞ்சிரங்குடா, கொத்தியாபுல ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 30 பேர்  பங்குபற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கிராம பெண்கள் நகரப் பிரதேசங்களுக்கு வந்து தொழில் வழிகாட்டல்களை பெற்றுக்கொள்வது பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சிரமமாக இருப்பதால்,  இப்பெண்களின்  காலடிக்கு தாங்கள் சென்று இத்தகைய தொழில் வழிகாட்டல் பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் இதனால், பலர் தொழில் வாய்ப்புக்களை பெறக்கூடிய சாதக நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

வை.எம்.சீ.ஏ. அமைப்பின் வவுணதீவு பிரதேச சமூக அணிதிரட்டுநர்களான பி.ஜெசிந்தா, சி.பரமேஸ்வரி,  வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.பயஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் இப்பயிற்சிநெறி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .