2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அல் கிம்மா சமுக சேவைகள் நிறுவனத்தின் 'முல்தகல் கிம்மா' கண்காட்சி

Super User   / 2014 ஜூன் 22 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித், தேவ அச்சுதன்


அல் கிம்மா சமுக சேவைகள் நிறுவனத்தினால் நடத்தப்படும் 'முல்தகல் கிம்மா' கண்காட்சி நேற்று சனிக்கிழமை (21) வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில் அல் கிம்மா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தருமான அஷ்செய்க் முதீப் தவாப் அஸ்ஸபீஈ, இராணுவத்தின் 23வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி கொடிப்பிலி, மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வீ.கமலதாஸ், ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் மற்றும் சவூதி அரேபிய பாடகர்கள் உள்ளிட்ட அதிதிகளும் கலந்து கொண்டனர்.

அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளரால் மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத்தளபதியிடம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிப்பதற்கான முஸ்லிம் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சினைகள், மற்றும் நல்லிணக்கத்துக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

புகைப்படக்கண்காட்சிகள், வாகனப் போக்குவரத்து தொடர்பான போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் விவரண நிகழ்வுகள், சிவில் பிரசைகள் சபை மற்றும் அல்-கிம்மா நிறுவனங்களின் கூடங்கள், இராணுவத்தின் பொறியியல் பிரிவின் காட்சிக்கூடம், சிறப்பு நாய்களைக் கொண்ட மிதிவெடி அகற்றும் பிரிவின் காட்சிகள், மருத்துவப்பிரிவு, கோள் மண்டலம் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அல்-கிம்மா நிறுவனத்தினால் வலது குறைந்த தமிழ் முஸ்லிம்களுக்கு  சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டதுடன், கண்பார்வை குறைந்தவர்களுக்கான 300 மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

மாலை 4 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வு நாளை திங்கட்கிழமை (23) முடிவடையும் என்று  அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி) தெரிவித்தார்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .