2025 மே 01, வியாழக்கிழமை

நடமாடும் விற்பனை நிலையம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 23 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

பொதுமக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களின் நன்மை கருதி இலங்கை கடற்;றொழில் கூட்டுத்தாபனமானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக  புதன்கிழமை தோறும் நடமாடும் விற்பனை நிலையத்தை  நடத்தவுள்ளதாக  இதன் மட்டக்களப்பு - கல்முனை பிராந்திய முகாமையாளர் கே.மோகனரூபன் தெரிவித்தார்.

எதிர்வரும் 25ஆம் திகதி புதன்கிழமையிலிருந்து மாலை 04 மணி முதல் இந்த விற்பனை நிலையம் இயங்கும். இதன்போது  மீன்கள்,  கருவாடு, மாசி, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் உள்ளிட்டவற்றை நியாய விலையில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, மட்டக்களப்பிலுள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு முன்பாகவுள்ள நிரந்தர விற்பனை நிலையத்தில் ஏனைய நாட்களில்; மீன் மற்றும் மீன் உற்பத்திகளை பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது ஏற்பட்டுள்ள மீன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த நடவடிக்கையை அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .