2025 மே 02, வெள்ளிக்கிழமை

காத்தான்குடிக்கு மணலை சுத்தம் செய்யும் இயந்திரம்

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஜவ்பர்கான்


காத்தான்குடி கடற்கரை மணலை சுத்தம் செய்யும் அதி நவீன இயந்திரத்தினை பொருளாதா அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உத்தியோகப்பூர்வமாக  செவ்வாய்க்கிழமை(24) இயக்கி வைத்தார். 

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின்  நிதியொதுக்கீட்டின் கீழ் இலங்கையில் முதன் முதலாக 2 கோடி ரூபா செலவில் ஜேர்மனியிலிருந்து இந்த கடற்கரை மணலை சுத்தம் செய்யும் அதிநவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டது.

இந்த இயத்திரம் காத்தான்குடி நகரசபைக்கு ஒப்படைக்கப்பட்டு அந்த இயந்திரத்தை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உத்தியோகப்பூர்வமாக இயக்கி வைத்தார்.

இந்த வைபவத்தில் ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இணைப்பாளர் அப்துல் காதர் மசூர் மௌலானா,  காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், நகரசபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர், எம்.அலி சப்ரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த இயந்திரத்தின் மூலம் கடற்கரை மணல் சுத்தம் செய்யப்படுவதுடன் மணிலில் காணப்படும் கழிவுகளை இது அகற்றுமென காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X