2025 மே 01, வியாழக்கிழமை

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


நல்லாட்சிக்கான பிரஜைகள் தொடர்பான கருத்திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு செவ்வாய்க்கிழமை(24) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் ஆரம்பமானது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை வலுவூட்ட மாற்று கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் சேஞ் போ கொமண்ட் கிறவுண்ட் எனும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த வேலைத் திட்டத்தின் அடிப்படையில் மேற்படி செயலமர்வு நடத்தப்படுகின்றது.

இச் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஓட்டமாவடி பிரதேச சபை,  அம்பாறை மாவட்டத்திலிருந்து சம்மாந்துறை பிரதேச சபை, ஆலையடிவேம்பு, வவுனியா வடக்கு பிரதேச சபை, முசலி பிரதேச சபை ஆகிய மூன்று பிரதேச சபைகளின் தலைவர்கள மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தச் செயலமர்வில் மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் நல்லாட்சி பிரிவின் பிரதானி திருமதி சிறியானி வி.ஜெயசுந்தர, மேல் மாகாண உள்ளூராட்சி முன்னாள் உதவி ஆணையாளர் என்.ஏ.தர்மசிறி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

இந்த திட்டத்தின் திட்ட அதிகாரி டி.சக்தி வேல் இந்த செயலமர்வை நெறிப்படுத்தினார்.

மேற்படி பிரதேச சபைகளுக்குரிய வருமானத்தை அதிகரித்தல் மற்றும் அந்த சபைகளுக்குரிய துணை விதிகளை தயாரித்தல் போன்ற விடயங்கள் இந்த செயலமர்வில் கலந்துரையாடப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .