2025 மே 01, வியாழக்கிழமை

ஆயித்தியமலையில் கோயில் எரிப்பு

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுட்குட்பட்ட மணிபுரம் பகுதியில் ஓலைக் கொட்டிலில் அமைக்கப்பட்டிருந்த  முத்துமாரியம்மன் ஆலயம் எரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி ஆலயத்தை புதன்கிழமை (25) காலை சென்று பார்த்தபோது  ஓலைக் கொட்டில் எரிந்த நிலையில் காணப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தனக்கு தகவல் தந்ததாகவும் பின்னர் அங்கு நேரடியாக சென்று பார்த்தபோது ஆலயம் முற்றாக எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் கிராமசேவகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .