2025 மே 01, வியாழக்கிழமை

தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 27 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, வவுணதீவு, காத்தான்குடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர நுண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டம் மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, 100 பேருக்கு அலங்காரப்பொருட்கள், மின்குமிழ்;கள், கை களுவும் திரவியம்,  பசை ஆகியவை தயாரிக்கும் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், வவுணதீவு உதவி பிரதேச செயலாளர் திருமதி எல்.பிரசாந்தன், காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.எசி.அகமட் அப்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் அனுசரணையுடன் விதாதாவள நிலையங்கள்; நடத்திவருகின்றன.

இம்மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலப் பிரிவுகளிலும் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .