2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

முஅத்தீன்களுக்கு உலர் உணவுகள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 30 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி மற்றும் காத்தான்குடியை அண்டிய பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் 100 முஅத்தீன்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை (29) வழங்கப்பட்டன.

கலாநிதி அலவி சரிப்தீனின் உதவியுடன் ஓப்பன் நிறுவனத்தால் ஒவ்வொருவருக்கும் 2,000 ரூபா பெறுமதியான அரிசி, பால்மா, ரின்மீன், பருப்பு, தேயிலை உள்ளிட்ட உலர் உணவுப்பொருட்கள்  வழங்கப்பட்டன.

பாலமுனை பிரதேசத்திலுள்ள அபூபக்கர் ஸித்தீக் பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓப்பன்; நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.ஜௌபர், செயலளார் எம்.ஏ.சாகீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X