2025 மே 01, வியாழக்கிழமை

பழுதடைந்த இயதிரப்படகிற்குப் பதிலாக மாற்றுப்படகு

Menaka Mookandi   / 2014 ஜூலை 01 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் - குறுமன்வெளிக்கு இடையிலான நீர்வழிப் பாதைக்கு தற்போது பழுதடைந்த நிலையில் பயன்படுத்தப்பட்டு வரும் இயந்திரப் படகுப் பாதையினை திருத்தி அமைக்கும் வரை மக்களின் போக்குவரத்திற்கென மாற்றுப்படகு ஒன்று நேற்று திங்கட்கிழமை (30) முதல் வழங்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.மகிந்தன் தெரிவித்தார்.

இந்நீர்வழிப் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த இயந்திரப்படகில் ஓட்டை விழுந்து ஆற்று நீர் உட்புகுந்த நிலையில் மிகவும் ஆபத்தான பிரயாணத்தினை பிரயாணிகள் மேற்கொண்டு வந்த நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளதை அடுத்து ஓட்டை விழுந்து பழுதடைந்து இயந்திரப்படகு புணரமைக்கும்வரை தற்காலிகமாக இப்போக்குவரத்து மார்க்கத்தில் பிரயாணம் செய்வதங்கு மாற்று இயந்திரப்படகு ஒன்று வழங்கப் பட்டுள்ளது.

இதனை வழங்குவதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் பிரயாணிகள் மற்றும் பிரதேச சங்கங்கள் ஒன்றிணைந்து நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர். இந்நீர் வழிப் போக்குவரத்திற்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் இயந்திரப் படகானது அண்மையில் பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்ட மண்முனை ஓடத்துறையில் பயன்படுத்தப்பட்டு பாலம் திறக்கப்பட்ட பின்பு நிறுத்திவைக்கட்டுள்ள நிலையிலேயே இப்படகு மண்டூர் குறுமன்வெளி நீர்வழிப் பாதைக்கு  வழங்கப்பட்டுள்ளது.

ஆயிக்கணக்கான பிரயாணிகள் தினமும் பிரயாணம் மேற்கொள்ளும் இப்போக்குவரத்து மார்க்கத்திற்கு தற்போது தற்காகலிகமாக வழங்கப்பட்டுள்ள இந்த இயந்திரப் படகினை நிரந்தரமாக வழங்குவதன் மூலம் எதிர்வருங் காலங்களில் விரைவான பிரயாணத்தினை மேற்கொள்வதற்கு ஏதுவாய் அமையும் என பிரயாணிகள் எதிர்பாக்கின்றனர்.

மண்டூர் - குருமண்வெளி நீர் வளிப் போக்குவரத்திற்கென இரண்டு இயந்திரப் படகுகளை சேவையில் ஈடுபடுத்துமாறு அப்பகுதி மக்கள் எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான அனுமதியினை மாகாண பணிப்பாளரிடம் கோரியுள்ளோம்.

அவரின் அனுமதி கிடைக்கப் பெற்றதும் மண்டூர் - குருமண்வெளி நீர்வழிப் போக்குவரத்திற்கென இரணடு இயந்திரப்படகுள் சேலையில் ஈடுபடுத்தலாம் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.மகிந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .