2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாகனேரியில் நெல் வயல்களுக்கு பாய்ச்சல் நீர்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 02 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வறட்சியால் பாதிக்கப்பட்ட வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வரும் சுமார் பத்தாயிரம் ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைத்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் இணைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.

அக்குராண, களுவாமடு, புணாணை,  மயிலந்தன்னை, மற்றும் கிடச்சிமடு உட்பட இன்னும் பல பகுதிகளை உள்ளடக்கிய பெரும் பரப்புக் கொண்ட நெல் விவசாயக் காணிகள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நீரின்றி வறண்டு போயுள்ளதாக  அப்பகுதி விவசாயிகள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

மாதுறுஓயா குளத்திலிருந்து வாகனேரி நீர்ப்பாசனக் குளத்திற்கு வரும் பாய்ச்சலுக்குரிய நீர் நெலும்வௌ, நமயல பகுதியில் கட்டப்பட்டுள்ள பாரிய அணையினால் தடைப்பட்டிருந்தது. இந்த விடயம் குறித்தும் பிரதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

பிரதியமைச்சர் உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுத்ததன் பயனாக, நீர் தடுப்பு அணை அகற்றப்பட்டதையடுத்து வாகனேரிக் கண்டத்துக்குரிய விவசாயிகளின் வயல்களுக்கு நீர் வரத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த முயற்சியால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயனடையவுள்ளதாகவும் அவர் கூறினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X