2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு சுகாதாரம் காக்கும் பொதிகள் வழங்கிவைப்பு

Super User   / 2014 ஜூலை 03 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வடிவேல் சக்திவேல்


பாடசாலைகளில் சுகாதார பழக்கவழக்கங்களை மேம்படுத்தும் முகமாக ரெரடஸ் ஹோம்ஸ் (ரி.டீ.எச்) எனும் நிறுவனத்தினால் சுகாதார பொருட்கள் அடங்கிய பொதிகள், மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு மட். களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில், அதிபர் சி.சிவபாதம் தலைமையில் புதன் கிழமை (02) நடைபெற்றது.

இந் நிகழ்வின் போது பற்சுகாதாரம், முறையாக கைகழுவுதல், என்பனவற்றை மையப்படுத்தியதாக, பற்தூரிகை, பற்பசை, சவற்காரம், நகம் வெட்டும் கருவி, போன்ற பொருட்களை உள்ளடக்கிய ரூபா 20,000 பெறுமதியான 357 பொதிகள்  தரம் 1 தொடக்கம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதன்போது போரதிவுப்பற்றுக் கோட்டக் கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன், பாடசாலை பிரதியதிபர் க.சந்திரகுமார், ரெரடஸ் ஹோம்ஸ் (ரி.டீ.எச்) நிறுவனத்தின் சுகாதார பயிற்றுவிப்பாளர் யோ.சிவகுமார், நிறுவனத்தின் வோஸ் (றுயுளுர்) இணைப்பாளர் பி.நியோரதன், நிருவாக உத்தியோகஸ்தர் எம்.தமயந்தி, மற்றும் சுகாதார முகாமையாளர் கே.கிருஸ்ணா, படசாலையின் சுகாதாரக் கழக அங்கத்தவர்கள். ஆகியோர் கலந்து கொண்டு இப் பொதிகளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X