2025 மே 02, வெள்ளிக்கிழமை

வடக்கு கிழக்கு நட்புறவின் இரண்டாவது கருத்திட்டம்

Kogilavani   / 2014 ஜூலை 04 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார், ரீ.எல்.ஜவ்பர்கான்


இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான வடக்கு கிழக்கு நட்புறவின் இரண்டாவது கருத்திட்டம் மட்டக்களப்பு வின்சன் உயர்தர மகளீர் பாடசாலையில் வியாழக்கிழமை இடம்பெற்றது.

ஹோமாகமை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் நல்லிணக்கத்தின் ஒற்றுமை எனும் அமைப்பைச் சேர்ந்த அதிபர் பிரதி அதிபர் பாடசாலை அபிவிருத்திக் குழு, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தைச் சேர்ந்த 10 பேர் வின்சன் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இக்கருத்திட்டத்தில் மட்டக்களப்பு இந்துக் கலலூரி, மருதமுனை அல்ஹம்ரா வித்தியாலயம், வின்சன் பாடசாலை மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் கலந்துகொண்டனர்.

இவ்வேலைத் திட்டத்தின் முதலாவது கருத்திட்டம் ஹோமாகம மகிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பங்குபற்றலுடன் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒன்று கூடல் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது முதலாவது கருத்திட்டத்தில் இடம்பெற்ற கலைநிகழ்வுகளில் பங்கு கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

மூன்றாவது கருத்திட்டம் இன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X