2025 மே 02, வெள்ளிக்கிழமை

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


இலங்கை வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி சமூக சேவைத் திட்டத்தின் கீழ் நடாளாவிய ரீதியில் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் டெங்கு நோயைக் ஒழிக்கும் நோக்குடன் இலங்கை வங்கி ஏறாவூர் கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிரமதானம் மற்றும் மரக்கன்றுகள்  நடும் வேலைத்திட்டம் இன்று (05) குடியிருப்பு கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வங்கிக் கிளை முகாமையாளர் திருமதி கமலா விவேகானந்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லிம், செயலாளர் எம.;எச்.எம்.ஹமீம்,  பாடசாலை அதிபர் திருமதி நிலாவேணி சாந்தகுமார் ஆசிரியர்களும்  பெற்றார்களும் கலந்துகொண்டனர்.

இச்சிரமதானப் பணிமூலம் பாடசாலைச்சுற்றாடல் சுத்தம் செய்யப்பட்டதுடன் அப்பாடசாலைக்கு காரியாலய பாவனைப்பொருட்களடங்கிய பொதியொன்றும் கையளிக்கப்பட்டது.


இதேவேளை, ஓட்டமாவடி இலங்கை வங்கி கிளையின் ஏற்பாட்டில் வங்கி முகாமையாளர் பிரான்சிஸ் திருச்செல்வம் தலைமையில், வாழைச்சேனை  கறுவாக்கேணி விக்ணேஸ்வரா கனிஷ்ட பாடசாலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இடம் பெற்றன.

வங்கி ஊழியர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு பாடசாலை சுற்றுச் சூழலை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X