2025 மே 02, வெள்ளிக்கிழமை

முதலாவது நடமாடும் சேவை

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவுச் சிக்கன கடனுதவிச் சங்கத்தின் (Education Employees cooperative Thrift and Credit Society) மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை (05) காலை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக, அதன் முகாமையாளர் ஏ.எம்.கே.பி. அத்தபத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் சேவையாற்றும் கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவுச் சிக்கன கடனுதவிச் சங்கத்தின் அங்கத்தவர்களுக்காக இச்சேவை நடாத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணி முதல் மாலை நான்கு மணிவரை இந்த நடமாடும் சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவுச் சிக்கன கடனுதவிச் சங்கத்தில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளல், விஷேட மற்றும் நிரந்தர வைப்புக்களிலிருந்து பணம் மீளப் பெற்றுக் கொள்ளல், நிரந்தர வைப்புப் பணத்தை பிணையாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளல், ரூபாய் 60 ஆயிரம் வரை கடன் தொகையை இடம்பெயர் சேவையிலேயே பெற்றுக் கொள்ளல், 150000 வரை பிணைக்கடன் பெற விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளல் போன்ற சேவைகளை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவுச் சிக்கன கடனுதவிச் சங்கத்தின் பொதுச் செயலாளர் காமினி குணத்திலக்க, பிரதிப் பொதுமுகாமையாளர் சீ.பீ.டீ.எஸ். விதாரண, உதவிப் பொதுமுகாமையாளர் லக்மினி ஜயஸ்ரீவர்தன உட்பட சங்கத்தின் அதிகாரிகள் 31 பேர் அச்சேவையில் பங்கேற்கின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X