2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு உடற்கல்வி போதனாசிரியர் நியமனம்

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த  உடற்கல்வி போதனாசிரியர் பதவி  வெற்றிடத்திற்கு புதிதாக  போதனாசிரியர் ஒருவர்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பதவிக்கு முத்துலிங்கம் பரணிதாஸன் என்பவர் நியமிக்கப்பட்டு;ள்ளார். இவர் தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் தங்கம் வென்றவர்.அத்துடன் மாகாணமட்டம் மற்றும் மாவட்ட ரீதியிலும் பல்கலைக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்சிகளிலும் பல சாதணைகளை புரிந்துள்ளார்.

தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் 19 விண்ணப்பதாரிகள் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர்.
உடற்கல்வி போதனாசிரியர் வெற்றிடத்திற்கு ஒருவர் மாத்திரம் தேவைப்பட்ட நிலையில் இப்பதவிக்குரிய ஆட்சேர்ப்பு தேர்வு நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மொறட்டுவ பல்கலைக்கழகத்திலிருந்து வருகைதந்த விளையாட்டுத்துறை உடற்கல்விப்பணிப்பாளர் உட்பட கிழக்கு பல்கலைக்கழக நிருவாகமும் இணைந்து மேற்படி நேர்முகத்தேர்வினை நடாத்தியிருந்தனர்.

இதன்போது நடைபெற்ற நேர்முகத்தேர்வின்போது பல்கலைக்கழக உடற்கல்வி போதனாசிரியருக்குரிய தகுதிநிலைக்குகேற்ப உடற்கல்வி போதனாசிரியர் பதவிக்கு மேற்படி ஆசிரியர் தெரிவுசெய்யப்பட்டு நியமனம் பெற்றுள்ளார் என கிழக்கு பல்கலைக்கழக தாபனங்கள் பகுதி தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X