2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

உழவு இயந்திரம் புரண்டு ஒருவர் பலி; இருவர் காயம்

A.P.Mathan   / 2014 ஜூலை 05 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்
 
மட்டக்களப்பு கொக்கடிச்சோலை, பண்டாரியாவெளி ஸ்ரீநாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவத்தில்  பறவைக்காவடி எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்தனர்.
 
காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
சம்பவத்தில் பலியானவர் 24 வயதுடைய கமலநாதன் டெனிகுயூசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரபாகரன் பிரியதர்சன் மற்றும் திவ்வியராசா ஜதுபான் (14) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.
 
கல்லடி பேச்சியம்மன் ஆலயத்திலிருந்து காவடி எடுத்துச்சென்ற இளைஞர்களே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
கொக்கடிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேறகொண்டுள்ளனர்.
 
பலியானவரின் சடலம் இன்று மாலை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X