2025 மே 02, வெள்ளிக்கிழமை

கதிர்காமம் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி

Menaka Mookandi   / 2014 ஜூலை 06 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து கதிர்காமத்துக்கு சென்ற போது பாணம, தெம்பிலிவத்த பிரதேசத்தில் உள்ள ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த தம்பதியினரின் 5 வயது மகன், ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

பாணம, தெம்பிலிவத்த பிரதேசத்தில் உள்ள குபுக்கன் ஓயா வாவியில் குளித்துக் கொண்டிருக்கும்போதே குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுவாஞ்சிக்குடி, செட்டிப்பாளையம் கட்டுப்பிள்ளையார் ஆலய வீதியை சேர்ந்த சுந்தரலிங்கம் வினோஜன் (5 வயது) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சிறுவனை குளிப்பாட்டி கரையில் விட்டுவிட்டு தாயும் தந்தையும் குளித்துக்கொண்டிருந்தபோது அச்சிறுவன் தவறுதலாக நீரில் வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பாணம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X