2025 மே 02, வெள்ளிக்கிழமை

பெண்களுக்கான தொழுகை மண்டபம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 07 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் பெண்களுக்கான தொழுகை மண்டபம் அமைப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை (06) அடிக்கல்  நாட்டப்பட்டது. 

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா ஹம்சாவின் முயற்சியால் இந்த தொழுகை  மண்டபம்  அமைக்கப்படவுள்ளது. 

இந்த நிகழ்வில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா ஹம்சா,  மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ  பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு நகருக்கு பல்வேறு தேவைகளுக்காக வரும் முஸ்லிம் பெண்கள் தொழுவதற்காக இந்த மண்டபம்  நிர்மாணிக்கப்படவுள்ளது.
இது மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் அனுசரணையுடனும் தனவந்தர்களின் நிதியுதவியுடனும்  நிர்மாணிக்கடவுள்ளதாக சல்மா ஹம்சா தெரிவித்தார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X