2025 மே 02, வெள்ளிக்கிழமை

வலது குறைந்த பெண்களை இணைத்துகொள்ள விண்ணப்பங்கள் கோரல்

Kogilavani   / 2014 ஜூலை 08 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள திலகவதியார் வாழ்வகத்தில் வலது குறைந்த பெண்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இயங்கும் சமூக நலன்ரி அமைப்பானது, கடந்தகால அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளை திலகவதியார் மகளிர் இல்லம் எனும் பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக பராமாரிக்கும் பணியினை திருப்பழுகாமத்தில் முன்னெடுத்து வருகின்றது.

இவ்வமைப்பு மேலும் மட்டக்களப்பு திழுப்பழுகாமத்தில் திலகவதியார் வாழ்வகம் எனும் பெயரில் வலது குறைந்த பெண்களை பராமரிக்கும் இல்லம் ஒன்றினை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக சமூக நலன்புரி அமைப்பின் இணைப்பாளர் திருமதி.சசிகலா-இராமேஸ்வரன் தெரிவித்தார்.

இவ் வாழ்வகத்திற்கே வலது குறைந்த பெண்களிடமிருந்து விண்ணபங்கள் கோரப்பட்டுள்ளன.

இங்கு, தங்கியிருந்து பாடசாலைக் கல்வி அல்லது தொழில் கல்வி என்பனவற்றை கற்க விரும்பும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற வலது குறைந்த 6 வயது முதல் 35 வயது பெண்களிடமிருந்து இவ் அமைப்பு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

விண்ணப்பப் படிவங்களை மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள சமூக நலன்புரி அமைப்பின் அலுவலகத்தில் அல்லது 065 2250189 எனும் தொலைபேசி இலக்கத்துடன் அலுவலக நாட்களில் தொடர்பு கொண்டு தபால் மூலமாக  பெற்றுக்கொள்ளலாம் எனவும் விண்ணப்பங்கள்யாவும் 2014.07.31 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப் பெறவேண்டும் எனவும்  சமூக நலன்புரி அமைப்பின் இணைப்பாளர் திருமதி. சசிகலா இராமேஸ்வரன் மேலும் தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X