2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மிளகாய் உற்பத்தி ஊக்குவிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 08 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மிளகாய் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில்  மட்டக்களப்பு விவசாயத் திணைக்களத்தால் 10 குடும்பப் பெண்களுக்கு வீட்டுத்தோட்டச் செய்கை பயிற்சிகள் அளிக்கப்பட்டதாக காத்தான்குடி விவசாய விரிவாக்கல் பிரிவின் விவசாயப் போதனா ஆசிரியை குந்தவை ரவிசங்கர் தெரிவித்தார்.

கடந்த 5ஆம் 6ஆம் 7ஆம் திகதிகளில் நடைபெற்ற இப்பயிற்சியின் நிறைவில் வீட்டுத்தோட்டத்தில் மிளகாய்ச் செடிகளை நடுவதற்காக  தலா குடும்பத்துக்கு 50  கொள்கலன்கள் படி மொத்தமாக 500 கொள்கலன்கள் செவ்வாய்க்கிழமை (08)  விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தப் பயிற்சியின்போதும் கொள்கலன் விநியோகத்தின்போதும்  மட்டக்களப்பு மத்தி வலய விவசாய உத்தியோகத்தர் மங்களேஸ்வரி சிவஞானமும் கலந்து கொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X