2025 மே 02, வெள்ளிக்கிழமை

கலந்துரையாடல்

Kanagaraj   / 2014 ஜூலை 08 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறுவர் உரிமைகள் பரிந்துரைக்கான வலையமைப்பினை (CRAN) புனரமைப்பு செய்வதற்கான வலுவூட்டல் நிகழ்வு எதிர்வரும் 10ஆம்திகதி காலை 10 மணிக்கு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது,

உள்@ர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் இல 67, புகையிரத வீதி மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு தமது அங்கத்துவ நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவர் விடயங்களில் அக்கறையுள்ள ஏனையவர்களும் கலந்து கொள்ளலாம் எனவும் இணையத்தின் செயலாளர் வி.ரமேஸ் ஆனந்தன் தெரிவித்தார்.

இவ்வலையமைப்பினை வலுவுள்ளதாக மாற்றுவதற்கு தங்களின் கருத்துக்களையும், ஆலோசணைகளையும் வழங்குவதோடு தங்களின் நிறுவனம் பணிபுரியும் பிரதேசத்தில் சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், சாவால்கள் தொடர்பான கருத்துக்களையும் வழங்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதில். சிறுவர் உரிமைகள் பரிந்துரைக்கான வலையமைப்பு CRAN பற்றிய விளக்கம், 03.  சிறுவர் உரிமைகள் பரிந்துரைக்கான வலையமைப்பு CRAN  ல் அங்கத்துவ நிறுவனங்களின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பான கருத்துக்களை கேட்டறிதல், மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளப்படவுள்ளது.

இவ் நிகழ்வுக்கான அணுசரணை சிறுவர் பாதுகாப்பு நிறுவனம் வழங்குவதுடன், அதன் கிழக்குப்பிராந்திய பொறுப்பாளர் மார்க் பற்றசனும் கலந்து கொள்வார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X