2025 மே 02, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் மூன்று தினங்களுக்கு மின்வெட்டு

Kanagaraj   / 2014 ஜூலை 08 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பராமரிப்பு வேலைகள் நடைபெறவுள்ளதால் மட்டக்களப்பின் வெவ்வேறு பகுதிகளில் அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.

நாளை 09ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை கடற்கரை வீதி களுதாவளையிலும்
நாளை மறுதினம் 10 வியாழக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை கல்லடி டச்பார் உட்பட சில பகுதிகளிலும்
எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை சுமைதாங்கியடி, விமானப்படைப் பகுதி, வலையிறவு மற்றும் வவுணதீவு. ஆகிய இடங்களில் மின்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X