2025 மே 02, வெள்ளிக்கிழமை

வவுணதீவில் பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகல் குறைந்துள்ளது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 09 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் பாடசாலைகளிலிருந்து  மாணவர்கள் இடைவிலகுவது 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது என  மட்டக்களப்பு காவியா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யோகமலர் அஜித்குமார் தெரிவித்தார்.

வறுமை, கல்வியில் அக்கறையின்மை, தூரம், பெற்றோரின்  கவனமின்மை உள்ளிட்ட  காரணங்களால் பாடசாலைகளிலிருந்து  மாணவர்கள் இடைவிலகும் நிலை காணப்பட்டது.

இந்த நிலையில், கல்வி  முக்கியத்துவம் தொடர்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்  மத்தியில்  ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வை அடுத்து இது குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

காவியா அமைப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 05 கிராமங்களில் பெண்கள் சங்கங்களை அமைத்து செயலாற்றி வருகின்றது. மேற்படி கிராமங்களில் கணவனை இழந்த பெண்கள்,  பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என்பவற்றை இணைத்து சுவிடிஸ் கூட்டுறவு நிறுவனத்தின் அனுசரணையுடன் செயலாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

இவர்களுக்கு சுழற்சிமுறைக் கடன், வீட்டுத்தோட்டச் செய்கைக்கான உதவிகள் உட்பட  பால்நிலை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வுச் செயற்றிட்டங்கள், தலைமைத்துவப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.  மேலும்,  பெண்களின் வாழ்வாதாரச் செயற்பாடுகள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருவதாகவும் யோகமலர் அஜித்குமார் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X