2025 மே 02, வெள்ளிக்கிழமை

தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 09 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


வவுணதீவுப் பிரதேசத்தில் யத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஞானம் பவுண்டேசன் நிறுவனத்தினால் இன்று (09), 79 தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

தையல் பயிற்சியினைப் பூர்த்தி செய்த 79 பெண்களுக்கு இந்த தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் த.நிர்மல்ராஜ், கணக்காளர் கே.ஜெகதீசன், ஞானம் பவுண்டேசன் நிறுவன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.சஞ்ஜீத் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது 17 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான 79 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 10 மிகவும் வறிய குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் வாழ்வாதாரத்துக்கான மானியம் வழங்கப்படவுள்ளதாகவும் ஞானம் பவுண்டேசன் நிறுவன அபிவிருத்தி உத்தியோகத்;தர் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X