2025 மே 02, வெள்ளிக்கிழமை

படையணியின் ஏற்பாட்டில் செயலமர்வு

Kogilavani   / 2014 ஜூலை 10 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன்


2014 அம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள  மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நெறிகள் நிலையத்தில் வியாழக்கிழமை(10) ஆரம்பமானது.

மட்டக்களப்பிலுள்ள 231 இராணுவ படையணித் தலைமையகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை ஊக்கப்படுத்தும் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்த செயற்திட்டத்தின் கீழே மேற்படி செயலமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜனர் ஜெனரல் லால்பெரேரா வின் ஆலோசனையின் பேரில் நடைபெறும் இச்செயலமர்வை, 231 இராணுவ படையணித்தலைமையகத்தின்  மட்டக்களப்பு மாவட்ட இராணுவ இணைப்பதிகாரி பிரிகேடியர் பாலித பெர்ணான்டோ ஆரம்பித்து வைத்தார்.

ஞானம் பௌன்டேனசன் நிறுவனத்தின் அனுசரணையுட்ன நடைபெறும் இந்த செயலமர்வின் ஆரம்ப வைபவத்தில் கிழக்குப் பலக்லைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிறேம்குமார் மற்றும் இராணுவ அதிhரிகள் உட்பட விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வு வெள்ளிக்கிழமை(11) வரை நடைபெறவுள்ளதுடன் இதில் 250 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X