2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஐந்து பாடசாலைகளுக்கு பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


புவி வெப்ப மயமாதலைக் குறைக்கும் செயற்பாட்டின் கீழ் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை, மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 5 பாடசாலைகளுக்கு பயன்தரும் நல்லின பழமரக் கன்றுகளை நேற்று வெள்ளிக்கிழமை (11) வழங்கியது.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட காந்திபுரம் கலைமகள் வித்தியாலயம், தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயம், களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, திக்கோடை கணேசா வித்தியாலயம், மண்டூர்-40 அரசினர் தமிழ் கலவன் பாடசாலை. ஆகிய  பாடசாலைகளுக்கு ஒவ்வொரு பாடசாலைக்கும் 10 பழ மரக் கன்றுகள் வீதம் 50 பழ மரக்கன்றுகள் இப்பாடசாலைகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கப்பட்டன.

இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு சூழலைப் பாதுகாக்கும் துண்டுப்பிரசுரங்களும், மரங்களின் பயன்கள் தொடர்பான பதாகைகளும் வழங்கப்பட்டன.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் நிறைவேற்று உத்தியோகத்தர் வி.பிறேமகுமார், முதலுதவி இணைப்பாளர் சீ.கஜேந்திரன்,உட்பட போரதீவுப்பற்று பிரிவுத் தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.
 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X