2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வீடு தீக்கிரை

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்,எஸ்.பாக்கியநாதன்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெள்ளிக்கிழமை (11) இரவு இடம்பெற்ற தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்தோர் உறங்கி கொண்டிருந்த போது குப்பிளாம்பு தவறி விழுந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீ வீடு முழுவுதும் பரவியதன் காரணமாக தீயினை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில்இ மின்சார உபகரணங்கள்இ உடைகள்இ தளபாடங்கள்இ பாடசாலை உபகரணங்கள் என பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீக்கிரையான வீட்டின் உரிமையாளருக்கு 4 பிள்ளைகள் உள்ளதாகவும் அவர்களில் 2 பிள்ளைகள் விஷேட தேவையுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X