2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ரஷ்ய உல்லாசப் பயணி மீது பாலியல் சேஷ்டை: ஒருவர் கைது

Kanagaraj   / 2014 ஜூலை 13 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ரஷ்யாவின் பெண்  உல்லாசப் பயணியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டில் வாழைச்சேனை – பேத்தாழைப் பகுதியைச் சேர்ந்த 33 வயதான நபரொருவரை சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

பாசிக்குடாவில் கடலோரப் பகுதில் தான் உல்லாசமாக இருந்த வேளையிலேயே அங்குவந்த மேற்படி நபர், தன்னை  பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டதாக  கல்குடாப் பொலிஸில்,  ரஷ்ய  பெண்  பிரஜை முறையிட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X