2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சிறுபோக வேளாண்மை அறுவடை விழா

Suganthini Ratnam   / 2014 ஜூலை 31 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு உறுகாமம் நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள சின்னவெளி கண்ட விவசாயிகளின் காலபோக வேளாண்மை அறுவடை விழா சித்தாண்டி பிரதேசத்தில நேற்று புதன்கிழமை (30) நடைபெற்றது.

உறுகாமம் பிரிவு திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவர் எம்.மகேந்திரராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்  நீர்ப்பாசன நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஐவன் த சில்வா, நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம்; பத்ரா கமலதாஸ, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ், நீர்ப்பாசனத் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்;.கோன்ராஜ், கமநலசேவை அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம், செங்கலடி பிரதேச திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஆர்.கெங்காதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சரியான நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவத் திட்டமிடல் காரணமாக கடந்த 8 வருடங்களுக்கு பின்னர் அமோக விளைச்சல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X