2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

பேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் நாடகம்

Gavitha   / 2014 ஜூலை 31 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


பாடசாலைக் கல்வித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் நாடகம் மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் தேசியப்பாடசாலையில் இன்று வியாழக்கிழமை (31) திரையிடப்பட்டது.

பாடசாலைகளில் நல்ல நாடகங்கள் காட்சிப்படுத்தி மாணவர்கள் மத்தியில் நாடக ரசனை மற்றும் நாடகப் பண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்க ஆய்வு கூடத்தினால் இவ்விறுவட்டு வடிவம் திரையிடப்பட்டது.

உயர்தரப் பிரிவில் நாடகமும் அரங்கியலும் கற்கும் மாணவிகளுக்காக இந்த நாடகம் திரையிடப்பட்டு கருத்துப் பரிமாறலும் கருத்துப் பகிர்வும் நடைபெற்றது.

இதில், 2010ஆம் ஆண்டு லயனல் வென்ற் அரங்கில் அரங்கேற்றப்பட்ட இராவணேசன் நாடகம் பேராசிரியர் மௌனகுருவின் விளக்கவுரையுடன் காட்சிப்படுத்தப்பட்டது.

இதில், முன்னாள் வடகிழக்கு மாகாண கலாசார உதவிப் பணிப்பாளர் எஸ்.எதிர்மன்னசிங்கம், கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா, பாடசாலை அதிபரும் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X