2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் கோப்பாவெளி, வெலிக்காகண்டி பாடசாலை மாணவர்களுக்கு சேவகம் நிறுவனத்தால் பாடசாலை உபகரணங்கள் வியாழக்கிழமை (31) வழங்கி வைக்கப்பட்டன.

சேவகம் நிறுவனத்தின் 'மாணவர்களுக்கு கைகொடுப்போம்' என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கோப்பாவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வெலிக்காகண்டி விபுலானந்தர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்குமான புத்தகப்பை, அப்பியாசக் கொப்பிகள், தண்ணீர் போத்தல் அடங்கலாக உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 
மேற்படி நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.முகுந்தன், சேகவம் நிறுவனத்தின் தலைவர் எஸ்.நிலாந்தன், சேகவம் நிறுவனத்தின் இணைப்பாளர் எஸ்.நித்தியானந்தன், கோப்பாவெளி, வெலிக்காகண்டி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பிரதீபன், கோப்பாவெளி கிராம சேவகர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
 
இலண்டன் கிறிஸ்தவ தேவாலயத்தின்  உதவியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X