2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

இலங்கையில் அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பு உறுதி

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

உலகிலுள்ள  நாடுகளில் இலங்கையிலேயே அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பு உறுதியாக உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

இதையிட்டு தாம் பெருமையடைய வேண்டும். எந்தவித அனர்த்தங்கள் ஏற்பட்டாலும்  மக்கள் எவ்விதத்திலும் மரணமடையக்கூடாது என்பதில் இலங்கை அரசாங்கம்  மிகவும் கவனமாக இருப்பதாகவும் அவர் கூறினார். 

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அக்ரெட் அரசசார்பற்ற அமைப்புடனும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துடனும் இணைந்து நடத்திய அனர்த்த ஒத்திகை நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேசத்தின் பட்டாபுரம் கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் கருத்துத்  தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை பெய்யத் தொடங்கினால் நாங்கள் பட்டாபுரம் மற்றும் வேத்துச்சேனை கிராமங்களை பற்றித்தான் சிந்திப்பதுண்டு. ஏனெனில்,  மிகவும் தாழ்வான பகுதியில் இந்தக் கிராமங்கள் அமைந்துள்ளன. சிறிய மழை பெய்தால் கூட இந்த இரண்டு கிராமங்களையும் பாதிக்கும்.  இவ்வாறுதான் இந்தக் கிராமங்களில் நிலைமை இருந்து வருகின்றது. ஆகையினாலேயே வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராமங்களாக  இந்தக் கிராமங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 

உலகில் இலங்கைலேயே அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பு உறுதியாக உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதையிட்டு நாம் பெருமையடைய வேண்டும். எந்தவிதமான அனர்த்தங்கள் வந்தாலும்,  மக்கள் எவ்விதத்திலும் மரணமடையக்கூடாது என்பதில் இலங்கை அரசு மிகவும் கவனமாக இருந்து வருகின்றது. 

அந்த வகையில், மக்களை பாதுகாப்பது எவ்வாறு என்பது தொடர்பான ஒத்திகை நிகழ்வுதான் இங்கு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அனர்த்த ஒத்திகை நிகழ்வை விட, தற்போது பட்டாபுரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து மிகவும் சிறப்பாகச்  செய்து காட்டியுள்ளனர்.

வெள்ள அனர்த்தம் ஒன்று வருவதாக இருந்தால், பிரதேச செயலாளருக்கு எமது மட்டக்களப்பு கச்சேரி தகவல்களை வழங்கும்.  மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துமாறு தகவல்கள் வழங்கப்படும். பிரதேச செயலாளர் கிராம சேவை உத்தியோகஸ்தருக்கு தகவல்களை வழங்குவார்.  கிரம சேவை உத்தியோகஸ்தர் மக்களுகக்கு தகவல்களை வழங்குவார். அவ்வாறு தகவல்கள் மக்களுக்கு கிடைக்கப் பெறும் பட்சத்தில், மக்கள் பாதுகாப்பாக வெளியேறி முகாம்களில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அனர்த்த காலங்களில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு சமைத்த உணவுகள் மற்றும் உலருணவுகள் வழங்கப்படும். இவைக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கெனவே தயார்படுத்தப்பட்டுள்ளன' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X