2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

சென்ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் தொண்டர் சேவையை ஆரம்பிக்க வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சென்ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் தொண்டர் சேவைப்பகுதியொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.இப்றாலெவ்வையை சென்ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தேசமான்ய ஏ.எல்.மீராசாகிப் நேற்று வியாழக்கிழமை சந்தித்தபோது இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விடுதிகளிலும் வெளிநோயாளர் பிரிவிலும் சென்ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் நிறுவனத்தின் தொண்டர்களினால் தொண்டர் சேவையை வழங்க முடியும்.

அதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சென்ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் தொண்டர் சேவைப்பகுதியொன்றை ஆரம்பிப்பதற்கான  நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும்  இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் விரைவில் தாம் நடவடிக்கை எடுப்பதாக டாக்டர் ஏ.எல்.இப்றாலெவ்வை தெரிவித்தார்.

சென்ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையில் 1,400 தொண்டர்கள் முதலுதவிப் பயிற்சிகளை நிறைவுசெய்துள்ளனர்.

இவர்கள் மூலம் இந்த தொண்டர் சேவையை வழங்க முடியும் என ஏ.எல்.மீராசாகிப் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X