2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

கொழும்பு பல்கலையின் ஊடகக் கற்கை மாணவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஹொரண ஸ்ரீபாலி வளாக ஊடகக்கற்கைத்துறை விரிவுரையாளர்களும்  மாணவர்களும் மட்டக்களப்புக்கு கற்கை கள விஜயம் மேற்கொண்டதாக ஊடகக்கற்கைத்துறைப் பிரிவுத் தலைவர் கலாநிதி ரஞ்சன் ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.

புதன்கிழமை(30)  காலை மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் ஏறாவூர் நகரசபைக்கும் இவர்கள் விஜயம் மேற்கொண்டனர்.

இவர்களை  ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலான வரவேற்றதுடன், கடந்த யுத்தகாலச் சூழ்நிலைகள் மற்றும் சமகால நிலைமைகள் பற்றி விரிவாக விளக்கமளித்தார்.

பொதுவாக ஆயுத வன்முறைகளுக்கு பின்னரான சமகால நிலைமை, இனங்களுக்கிடையிலான சகவாழ்வுச் சூழ்நிலை, பாதிப்புக்களிலிருந்து மக்கள் மீண்டெழுவதற்கு சாதகமான வாய்ப்புக்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்திகள் உள்ளிட்ட பல விடயங்கள் தமது கள கற்கை விஜயத்தின்போது அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்ததாக தலைமை விரிவுரையாளர் குமேஷ் பிரபாஷினி தெரிவித்தார்.

அங்கு ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

இனங்களுக்களுக்கிடையிலான இன ஐக்கியத்தை வளர்ப்பதில் இப்பகுதியில் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பங்கும் பணியும் பற்றியும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஹொரண ஸ்ரீபாலி வளாக ஊடகக் கற்கைத் துறை விரிவுரையாளர்களும்  மாணவர்களும் கேட்டறிந்து கொண்டனர்.

யுத்த காலத்தில் படுகொலைகளும் இனச்சுத்திகரிப்பும் தொடர்ச்சியான தாக்குதல்களும் இடம்பெற்று திறந்தவெளி அகதி முகாம்போல ஆக்கப்பட்டிருந்த ஏறாவூர் நகர பிரதேசத்தில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட சாதகமான மாற்றங்களால் ஏறாவூர் கல்விக் கோட்டம் தற்பொழுது இலங்கையில் கடந்த மூன்று வருடங்களாக முதல் தர கல்வி அடைவு மட்டத்தை எட்டியிருப்பதாக ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலான விளக்கமளித்தார்.

யுத்தப் பாதிப்புக்களிலிருந்து கல்வி அபிவிருத்தியை நோக்கி மீண்டெழுவதற்கு இது சிறந்ததொரு எடுத்துக் காட்டு என்று அலிஸாஹிர் மௌலானா கூறினார்.

இலங்கையில் கடைசியாக உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஏறாவூர் கல்விக் கோட்டம் கடந்த மூன்று வருடங்களாக இடம்பெற்று வரும் க.பொ.சா.த. பரீட்சையில் ஆகக் கூடிய சித்திடையும் திறனைப் பெற்று முதலாமிடத்தைத் தக்கவைத்து  வருகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X