2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல், தேவ அச்சுதன் 


மட்டக்களப்பு,  கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாணவர்களின்  பாடசாலை இடைவிலகலைக் குறைத்து, கல்வி மேம்பாட்டை வளர்க்கும் நோக்கில் தூர இடங்களிலிருந்து பாடசாலைக்குச் செல்லும் 54 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் வைபவம் வெள்ளிக் கிழமை (01) பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம்; தலைமையில் கோரகள்ளிமடு ரெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கோறளைப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் வி.குணலிங்கம், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான மாவட்ட இணைப்பாளர் வி.குகதாஸன், சமுர்த்தி முகாமையாளர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி நிதியத்தின் உதவியில் 20 துவிச்சக்கர வண்டிகளும், அரச சார்பற்ற அமைப்புக்களின் உதவியில் 34 துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டதாக  கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X