2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

வாகன விபத்தில் பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் பிரதான வீதியில் நேற்று (01)  இடம்பெற்ற வாகன வீதி விபத்தில் பஸ் வண்டி ஒன்றின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதான வீதியூடாக சென்ற டிப்பர் வாகனம் ஒன்று ஏறாவூர் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சடுதியாகத் திரும்பி வீதியைக் கடக்க முற்பட்டவேளையில், பின்னால் பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பஸ் வண்டி டிப்பர் வாகனத்தின் பின்புறமாக மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பஸ் வண்டியின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

இருப்பினும் பஸ் வண்டியின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதோடு பஸ்ஸில் பயணித்தவர்களும் காயங்களின்றி காப்பாற்றப்பட்டுள்ளனர் இங்கு குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X