2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

வீட்டுக்குள் நுழைந்த முதலை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவடிவேம்பு குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை (02) அதிகாலை 3.00 மணியளவில் 8 அடி நீளமான முதலை வந்ததினால் மக்கள் பீதியடைந்தனர்.

வீட்டு உரிமையாளர் அயலவர்களின் உதவியுடன் முதலையை விரட்ட முற்பட்ட போது அது தம்மை தாக்க முற்பட்டதாகவும் இதனையை அடுத்தே வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்ததாக கிராம வாசிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் முதலை பிடிக்கப்பட்டது.

குறித்த முதலையை  அம்பாறையிலுள்ள விலங்குகள் சரணாலயத்தில் விடவுள்ளதாக பிராந்திய அலுவலகப் பொறுப்பாளர் ஜானக சாந்த குமார தெரிவித்தார்.

தற்பொது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீர் நிலைகள் வற்றி வருவதனால் நீர் வாழ் உயிரினங்கள் இவ்வாறு வெளிவருவதாக கிராம வாசிகள் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X