2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கு விசேட பயிற்சி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கல்குடா கல்வி வலய கோறளைப்பற்றுப் பிரதேசத்திலுள்ள  பாடசாலைகளில் தரம் 5 மாணவர்களுக்கான விசேட மொழி மற்றும் கணித முகாம் பிரயோக பயிற்சிகள் சனிக்கிழமை (02) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (03) வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.

25 பாடசாலைகளிலும் இருந்து சுமார் 400 மாணவர்கள் இந்த பிரயோக பயிற்சியில் கலந்து கொண்டார்கள்.

'ஒவ்வொரு பிள்ளையும் பார்த்தும் கேட்டும் கற்பதை விட ஒன்றைத் தொட்டும் கையாண்டும் பரிசோதனை செய்தும் கற்பதன் முலம் மாணவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.  இதனால் உயிர்ப்புடன் கூடிய கற்றல் அனுபவமும் அதனை அறியும் ஆவலும் ஏற்படுகின்றது என்பதனை அடிப்படையாக கொண்டுதான் இந்தச் செயற்பாட்டு முகாம் நடைபெற்றது' என்று கல்குடா கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகரான யோகேஸ்வரி கோபாலரெட்ணம் தெரிவித்தார். 

இந்த பிரயோக பயிற்சி முகாமில் கோறளைப்பற்று பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் வளவாளர்களும் ஆசிரியர்களும் பிரயோக பயிற்சியளிப்பை மேற்கொண்டிருந்தனர்.

ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர்கான யோகேஸ்வரி கோபாலரெட்ணம். கே. யோகராஜா, சௌந்தரி அருளேந்திரன், ரேவதி ராமச்சந்திரன் ஆகியோரின் தலைமையின் கீழ் இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.       


                           

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X