2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

தென்னந்தோட்டத்தில் தீ

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


பாசிக்குடாவிலுள்ள தென்னைச் செய்கை சபைக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தின் 03 ஏக்கர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இரவு பரவிய தீயினால் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக  தென்னை பயிர்ச் செய்கை சபையின் பாசிக்குடா கிளையின் உதவி முகாமையாளர் தெரிவித்தார்.

மேற்படி தென்னந்தோட்டத்தில் பரவிய தீயை மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், தென்னை அபிவிருத்திச் சபை ஊழியர்கள், கல்குடா பொலிஸார், இராணுவம் ஆகியோர் இணைந்து கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததாகவும் அவர் கூறினார். 

திடீரென  ஏற்பட்ட தீயை  உடனடியாக கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததால், 238 ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள தென்னந்தோட்டத்தை ஓரளவு பாதுகாக்க முடிந்ததாகவும் அவர் கூறினார்.

தென்னந்தோட்டத்தில் தீ ஏதேச்சையாக பரவியதா அல்லது யாராவது தீ வைத்தார்களா என்பது தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X