2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

காஸா குழந்தைகளுக்கு நிதியனுப்ப தீர்மானம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

அமைச்சர் பசீர் சேகுதாவூத் எழுதிய சோர்விலாச் சொல் நூல் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிதி, பலஸ்தீன் காஸாவிலுள்ள குழந்கைளுக்கு பால்மா வாங்குவதற்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

இந்த நூலின் மூலம் கிடைக்கும் ஒரு ரூபாயைக் கூட தான் எடுக்கப்போவிதல்லை எனவும் இதன் மூலம் கிடைக்கும் நிதி  பலஸ்தீன் காஸாவிலுள்ள குழந்கைளுக்கு பால்மா வாங்குவதற்கு காஸாவுக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் பசீர்  சேகதாவூத் 1991ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக சோர்விலாச் சொல் எனும் நூல் வெளிவந்துள்ளது.

இந்நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை(3) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X