2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

மெழுகு பூசப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பிள் பழங்கள் கைப்பற்றப்பட்டன

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பிரபலமான உணவகங்கள் உட்பட சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முற்று முழுவதுமாக மெழுகு பூசப்பட்ட அப்பிள் பழங்கள் ஆயிரக்கணக்கில் கைப்பற்றப்பட்டதாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் சிரேஷ்ட மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் எம்.எச்.எம். பழீல் தெரிவித்தார்.

ஏறாவூர் நகரில் செவ்வாய்க்கிழமை(5) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது இவை கைப்பற்றப்பட்டன.

இதன்போது, பிரபலமான உணவகங்கள், சந்தை, பழக் கடைகள் போன்றவற்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உயர் ரக அதிக விலை கூடிய அப்பிள் பழங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. அப்பிள் பழத்தின் மேல் தோலைத் சுற்றி கனமான மெழுகுப் படை பூசப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அவற்றை விற்பனையிலிருந்து அகற்றுமாறு பணிப்புரை வழங்கிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கைப்பற்றப்பட்ட அப்பிள் பழங்களை பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்புவதற்காக எடுத்துச் சென்றனர்.

உத்தரவை மீறி பழக்கடைகளில் இத்தகைய மெழுகு பூசப்பட்ட அப்பிள் பழங்களை விற்பனை செய்வோர் மீது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பழ வியாபாரிகள் இதன்போது எச்சரிக்கப்பட்டனர்.

உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய வெளிநாட்டுப் பழவகைகளை வாங்கி உண்பதை தவிரத்;து கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாகவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X