2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

அபிவிருத்தி திட்டங்களின் அறிக்கை தயாரிக்கும் செயலமர்வு

Super User   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-  தேவ அச்சுதன்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் கோவைப் பராமரிப்பு தொடர்பான செயலமர்வு மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது.

மாவட்ட திட்டமிடல் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் இச் செயலமர்வு நடைபெற்றது.

இச் செயலமர்வில் ஒரு கிராமத்துக்கு ஒரு வேலை, கிராமிய பாடசாலை அபிவிருத்தி,  பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட வேலைத்திட்டம், கிழக்கின் மீளாய்வு விசேட வேலைத்திட்டம், இந்திய வீடமைப்புத்திட்டம், வரட்சியால் பாதிக்கப்பட்ட சிறிய குளங்களின் புனரமைப்புத்திட்டங்கள், மீள்குடியேற்ற வேலைத்திட்டங்கள், தேசத்திற்கு மகுடம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டன.

விளக்கவுரைகளை மாவட்ட திட்டமிடல் செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.சுதாகரன், எஸ்.முரளிதரன், ஏ.சுதர்சன், திருமதி ஜெ.கணேசமூர்த்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜீ.சுதாகர் உள்ளிட்டோர் வழங்கினர்.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுகளினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை கையாளும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X