2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவிற்குட்ட நெல்லூர் கிராமத்திற்கூடாக மின்சார கம்பி இணைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த ஊழியர் திங்கட்கிழமை (04) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக என்று ஆயித்தயமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சாரம் தாக்கி இறந்தவர் பொலன்நறுவை ஹிங்குறாகொடயைச் சேர்ந்த மாரசிங்ஹ முதியான்சலாகே விபுலரெட்ன (வயது 22) என்று பிரதேச சடுதி மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்சார விஸ்தரிப்புப் பணிகளுக்காக உப ஒப்பந்த (ளுரடி ஊழவெசயஉவ) நிறுவனமான தமயந்தி எலெக்ரிகல் நிறுவனத்தின் பணியாட்களில் ஒருவரான விபுலரெட்ன சக ஊழியர்களுடன் சேர்ந்து மின்சார கம்பி இணைப்பு வேலைகளில் ஈடுபடுவதற்கு ஆயத்தமாகி இருந்துள்ளார்.

அந்நேரத்தில் உயர் அழுத்த மின் கம்பியில் மின் நிறுத்தப்படாமல் இருந்துள்ளது. எனினும் இதனை அறியாத நிலையில் அவர் அதனைத் தொட்டவுடன் மின்சாரம் சடுதியாகத் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனை இன்று செவ்வாய்கிழமை (05) பிற்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி என்.ஏ. தாஹிரால் மேற்கொள்ளப்பட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X