2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் பள்ளிவாயல்களின் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த றமழான் நோன்புப் பெருநாள் காலப்பகுதியில், காத்தான்குடி பிரதேசத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்பட்டிருந்தன. இவற்றைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

அதனால், குறித்த பிரதேசத்தின் போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X