2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

வறுமையை ஒழிப்பதற்கான கடனுதவி வழங்கும் கருத்தரங்கு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 06 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேசத்தின் வறுமையினை ஒழிப்பதற்காக மத்திய வங்கியினால் குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவியினை வழங்கும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் கே. இளங்கோ தலைமையில், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் வங்கியின் பிராந்திய உதவி முகாமையாளர் ஜெயசித், மத்திய வங்கியின் வறுமை ஒழிப்பு நுன்கடன் திட்டக் குழுத்தலைவர் சிறிபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.

மேலும் மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை)  பிரதேசத்தில் அமைந்துள்ள 24 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுமிருந்து பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட நாணயத் தாள்களை மக்கள் எவ்வாறு இலகுவாக அடையாளம் காணலாம் என்பது தொடர்பாகவும்  விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X