2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினால் கோழிகள் வழங்கி வைப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 06 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினால் வாழ்வின் எழுச்சி பயனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் திட்டமான வாழ்வாதார கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகம் தோரும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் புதன்கிழமை (06) கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட  101 பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் கோழிகளும் அதற்கான உணவு மற்றும் மருந்து வகைகளும் கோறளைப்பற்று பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி திணைக்கள காரியாலயத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையில் ஒரு குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியில் 101 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வாழ்வின் எழுச்சி திணைக்கள முகாமைத்துவ பணிப்பாளர் தேவமனோகரி பாஸ்கரன், வங்கி முகாமையாளர் கோ.லதா, கருத்திட்ட முகாமையாளர் திருமதி எஸ்.தமிழ்வானி, வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X